ஒவ்வொரு ஆண்டும் 6 ஆம் வகுப்பு படிக்கும் 20 ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 15 ஆண்டுகள் இலவச கல்வி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார் ...
ஒவ்வொரு ஆண்டும் 6 ஆம் வகுப்பு படிக்கும் 20 ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து 15 ஆண்டுகள் இலவச கல்வி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார் பிரபல நடிகர் மோகன்லால்.
கேரளா மாநிலம் ஆதிவாசி பழங்குடியின கிராமமான அட்டப்பாடியில் இருந்து 20 குழந்தைகளை தத்தெடுத்த பிரபல நடிகர் மோகன்லால், 15 வருட படிப்பு இலவசமாக வழங்க உள்ளார், இந்த 15 வருடங்களில் குழந்தைகளுக்கு பெற்றோராகவும் ஆசிரியராகவும் எப்போதும் இருப்பேன் என்கிறார்.
மோகன்லால் தலைமையிலான விஸ்வசாந்தி அறக்கட்டளை, கேரளா மாநிலத்தில் பல்வேறு தன்னார்வ சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஒரு அமைப்பாகும். கோவிட் பாதிப்பு காலங்களில் கூட சுகாதாரத் துறைக்கும், கேரள மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிய இந்த அமைப்பு, தற்போது சமூக நலன் சார்ந்த பல்வேறு உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பழங்குடியின பகுதிகளில் இருந்து 20 குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்கும் திட்டமானது தொடங்கி உள்ளார். இந்தத் திட்டத்திற்கு 'விண்டேஜ்' என்று பெயர். இத்திட்டம் அட்டப்பாடியில் இருந்து தொடங்கப்பட்டது. அட்டப்பாடியில் உள்ள கிராமத்தில் இருந்து 20 ஆதிவாசி பழங்குடியின குழந்தைகளை அந்த அமைப்பு தத்தெடுத்துள்ளன.
சிறப்பு முகாம் மூலம் இந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்வி அளிக்கப்படும். அவர்கள் எந்தப் பாடத்தை படிக்க விரும்புகிறீர்களோ, அதற்கேற்ற வகையில் அவர்களின் விருப்பங்களை, லட்சியங்களை பூர்த்தி செய்ய உதவும் என்று நிறுவனம் உத்தரவாதம் அளிக்கிறது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 குழந்தைகளின் 15 ஆண்டு படிப்பு மற்றும் அது தொடர்பான செலவுகள் உள்ளிட்டவற்றை இந்த அமைப்பு ஏற்கும்.
இந்த 15 வருடங்களிலும் குழந்தைகளுக்கு பெற்றோராகவும் ஆசிரியராகவும் எப்போதும் இருப்பேன் என்று மோகன்லால் கூறினார். மோகன்லாலின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் அவர் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து வரும் வருடங்களிலும் இது போன்ற குழந்தைகளை தத்தெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments