மணவாளக்குறிச்சி அருகே கல்படி சேவிளையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய மகள் நிர்மலா (வயது 33). இவருக்கும், நாகர்கோவில் கோட்டார் சரலூரை சேர்ந்த தொ...
மணவாளக்குறிச்சி அருகே கல்படி சேவிளையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய மகள் நிர்மலா (வயது 33). இவருக்கும், நாகர்கோவில் கோட்டார் சரலூரை சேர்ந்த தொழிலாளி சிதம்பரத்திற்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகள் இருக்கிறாள். கடந்த ஒரு ஆண்டாக நிர்மலா உடல் நிலை பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்..
இந்தநிலையில் கடந்த 7-ம் தேதி கல்படி சேவிளையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மனைவியுடன் சிதம்பரம் வந்தார். அப்போது அவர் நிர்மலாவை தாய் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். நேற்று காலை சரஸ்வதி ரேஷன் கடையில் பொருள் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் நிர்மலா தீயில் கருகி இறந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அருகில் மண்எண்ணெய் கேன் கிடந்தது. நிர்மலா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுபற்றி சரஸ்வதி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். நிர்மலா தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments