Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

'மணமகன் தேவை' என விளம்பரம் கொடுத்த 73 வயது ஓய்வு பெற்ற மைசூரு ஆசிரியை

மைசூருவை சேர்ந்த 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை தனக்கு'மணமகன் தேவை' என செய்தித்தாளில் கொடுத்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள...

மைசூருவை சேர்ந்த 73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை தனக்கு'மணமகன் தேவை' என செய்தித்தாளில் கொடுத்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் ஜானகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 73 வயதான இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். ஜானகி கடந்த இரு தினங்களுக்கு முன் கன்னட செய்தித்தாள் ஒன்றில் தனக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்தார்.
அந்த விளம்பரத்தில், ''73 வயதான எனக்கு என்னை விட மூத்த, நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை கொண்ட‌வர் மணமகனாக தேவை. கட்டாயம் பிராமணராக இருத்தல் வேண்டும்''என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் கூறுகையில், ''எனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. பெற்றோரும் இறந்துவிட்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என யாரும் இல்லை.
கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். முதுமையில் தனிமை மிகவும் வேதனையை தருகிறது. வீட்டில் தனியாக இருக்கவும், தனியாக வெளியில் செல்லவும் பயமாக இருக்கிறது. எனவே எனக்கு கணவர் தேவை என்பதை காட்டிலும், நல்ல துணை தேவைப்படுகிறார். எனக்கு நல்லவர் துணையாக கிடைத்தால் எஞ்சிய வாழ்வை நிம்மதியாக வீட்டில் வாழ முடியும். நடைபயிற்சிக்கு செல்லவும், வெளியில் சென்று வரவும் எளிதாக இருக்கும்''என்றார்.

அந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி எதிர்ப்பும் ஆதரவும் பெற்றுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ரூபா ஹாசன் கூறும்போது, '' 73 வயதில் தனக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுக்கவே மிகப் பெரிய தைரியம் வேண்டும். அந்த பெண்மணியின் துணிச்சலையும், முடிவை வரவேற்கிறேன். என்னைப் போல ஏராளமானோர் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோம். அவரை விமர்சித்து கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்த தேவை இல்லை. அவரவர் வாழ்க்கையை வாழ அவரவருக்கு முழு உரிமை இருக்கிறது. அதில் மதம், சாதி, கலாச்சாரம் போன்றவற்றை கொண்டு தடை போடுவது நியாயம் கிடையாது''என்றார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...