திண்டிவனம் அடுத்த எறையானூர் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் என்ற அருணாச்சலம் (18) என்பவர், அதே பகுதியை சேர்ந்த அபிநயாவை (16) என்ற சிறுமியை காதலித...
திண்டிவனம் அடுத்த எறையானூர் கிராமத்தை சேர்ந்த ராமஜெயம் என்ற அருணாச்சலம் (18) என்பவர், அதே பகுதியை சேர்ந்த அபிநயாவை (16) என்ற சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் உறவினர்கள் அண்ணன் தங்கை உறவு என்பதால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து இருவரும் தலைமறைவாகினர்.

இதனையடுத்து போலீசில் புகார் அளித்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், திண்டிவனம் அடுத்துள்ள கருணாவூர் வயல்வெளி பகுதியிலுள்ள புளியமரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக காணப்பட்டனர்.
போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து உயிரிழந்த ராமஜெயம் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் அடித்து கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
குறிப்பாக 10 நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு அவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளித்தனர். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
No comments