குமரி மாவட்டத்தில் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு வழிபடும் சர்வ மத திருத்தலம், பள்ளியாடி பகுதியில் அமைந்துள்ள பழைய பள்ள...
குமரி மாவட்டத்தில் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு வழிபடும் சர்வ மத திருத்தலம், பள்ளியாடி பகுதியில் அமைந்துள்ள பழைய பள்ளி அப்பா திருத்தலமாகும்.
மிகவும் புகழ்பெற்ற இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் மத நல்லிணக்க விழா மற்றும் சர்வமத பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மத நல்லிணக்க விழா மார்ச் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடக்கிறது.
வரும் மார்ச் 15-ம் தேதி மாலை 3 மணி முதல் மத நல்லிணக்கம் மற்றும் சர்வமத பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாபெரும் அன்னதான சமபந்தி விருந்து நடைபெறுகிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பழைய பள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை தலைவர் பால்ராஜ், பொதுசெயலாளர் குமார், பொருளாளர் சுந்தர்ராஜ், செயலாளர்கள் ஐயப்பன், சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
No comments