குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம் கார்மல் தலைமையில் குளச்சலில் நடந்தது. ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில தலைவர் சுசீலா, அ...
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகிகள் கூட்டம் கார்மல் தலைமையில் குளச்சலில் நடந்தது.

ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில தலைவர் சுசீலா, அருள் டேவிட், செயனுல் ஆப்தீன், கணபதி, முத்துக்குமார், மிக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செயலாளர் அந்தோணிமுத்து கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கழிவறை வசதி, கிருமி நாசினி கூடுதல் பயன்படுத்துதல், கூடுதலாக 50 தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
சேதமடைந்துள்ள உள்ளூர் சாலைகளை சரிசெய்ய வேண்டும், 100 இடங்களில் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.
கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும், எனவும் வலியுறுத்தப்பட்டது.
No comments