குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில். இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்ப...
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்.

இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா பக்தர்கள் அதிகளவில் வந்து அம்மன் அருள் பெற்று செல்கின்றனர்.
கோயிலில் மாசிக்கொடை விழா மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து மாநாடு பந்தலில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு டாக்டர் தமிழசை சுந்தர்ராஜன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
இரவு 7 மணி அளவில் மாபெரும் திருவிளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. 9 ஆயிரம் திருவிளக்குகளுடன் பெண்கள் பூஜை செய்தனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் செய்யப்பட்டுள்ளது.
No comments