அமெரிக்காவில் அதிக கொலைகளை செய்த சீரியல் கில்லர் சாமுவேல் லிட்டில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80. கொலை குற்றத்திற்காக அவர்...
அமெரிக்காவில் அதிக கொலைகளை செய்த சீரியல் கில்லர் சாமுவேல் லிட்டில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 80.

கொலை குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் நீரிழிவு நோய், இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கலிஃபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அமெரிக்க வரலாற்றி அதிக கொலைகளை செய்த சீரியல் கில்லரன் இவர்தான். 93 கொலைகள் செய்ததை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் கொன்றவர்கள் அனைவரும் பெண்கள். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், விபச்சாரிகள், சமூகத்தில் கீழ்மட்ட நிலையில் இருப்பவர்கள் என தெரிகிறது.
இவர் 1970 முதல் 2005 வரை கொலைகள் செய்துள்ளார். முன்னதாக தாம் கொலை செய்யவில்லை என்று கூறிவந்த இவர் பின்னர் அவரே ஒப்புக் கொண்டார்.

இவர் கொலை நடந்த ஆண்டு, இடம், உடலை எறிந்த இடம் போன்ற விவரங்களையும் எழுதிவைத்திருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
No comments