தமிழத்தில் ஜனவரி இராண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவ...
தமிழத்தில் ஜனவரி இராண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவரி இரண்டாம் ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. மாநில சுகாதார செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இந்த தகவலை தெரிவித்தார்.
அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன் படி கொரோனா தடுப்பூசிக்கு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தயாராக இருக்குமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாநில தலைவர்கள் மற்றும் சில மாவட்டங்களை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பயிற்சி நடைபெறும் என சுகாதாரத்துறை செயலர் ராதகிருஷ்ணன் தெரிவித்தார். ஏற்கனவே ஆந்திரா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments