கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் மயங்கிவிழுந்து பலியானார். ஆரோக்கியபுரத்தை சேர்ந்த மோசஸ் என்பவருக்கு சொந்...
கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் மயங்கிவிழுந்து பலியானார்.

ஆரோக்கியபுரத்தை சேர்ந்த மோசஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த ஜோன்ஸ், ஆன்றோ, செல்வன், அந்தோணிதாசன், ததேயுஸ் ஆகிய 5 மீனவர்களும் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
ஆரோக்கியபுரத்தில் இருந்து சுமார் 8 நாட்டிக்கல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது ததேயுஸ் (43) என்ற மீனவர் திடீரென படகில் மயங்கி விழுந்து பலியானார்.
இதனையடுத்து மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். சம்பவம் குறித்து கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் நம்பியார் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தார்.
இறந்த மீனவர் ததேயுஸூக்கு ரோஸ்வெல் என்ற மகளும் அபிஷா என்ற மகளும் உள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க சென்றமீனவர் இறந்த சம்பவம் ஆரோக்கியபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments