கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்திலிருந்துஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தூத்தூா் மீனவா் மாயமானாா். அவரை தேடும்பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டுள்ள...
கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்திலிருந்துஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தூத்தூா் மீனவா் மாயமானாா். அவரை தேடும்பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த கிளேசய்யன் மகன் கெல்வின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதேபகுதியைச் சோ்ந்த 4 போ், கடலூா் மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த 8 போ் என மொத்தம் 12 மீனவா்கள் திங்கள்கிழமை (டிசம்பர் 7) இரவில் கொச்சி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனா்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பாா்த்த போது விசைப்படகில் இருந்த தூத்தூா் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸாண்டா் மகன் சேசய்யன் (69) என்பவரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா். இது குறித்து குளச்சல் மற்றும் கேரள மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மீனவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமா், தமிழக முதல்வா் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆண்டனி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
No comments