மணவாளக்குறிச்சியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மத்திய அரச...
மணவாளக்குறிச்சியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மணவாளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி குருந்தன்கோடு ஒன்றியகுழு உறுப்பினர் புவனேந்திரன் தலைமை தாங்கினார்.
தி.மு.க. குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் குட்டிராஜன், மணவாளக்குறிச்சி பேரூர் செயலாளர் நிஜாம், த.மு.மு.க. பேரூர் தலைவர் பகர்தீன், எஸ்.டி.பி.ஐ. கிளைத் தலைவர் அஸீம் உட்பட 17 பேர் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாததால் மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீஸார் 17 பேரையும் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
No comments