Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரி மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் இன்று போராட்டம்

குமரி மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் இன்று டில்லியில் வேளாண்மை சட்டத்தை திரும்பபெற கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதாரவாக போராட்டம் நடந்தது. ...

குமரி மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் இன்று டில்லியில் வேளாண்மை சட்டத்தை திரும்பபெற கோரி போராடும் விவசாயிகளுக்கு ஆதாரவாக போராட்டம் நடந்தது. நாடு தழுவிய 'பாரத் பந்த்'ற்கு அழைப்பு விடப்பட்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் இன்று பஸ்கள் வழக்கம் போல் ஓடின 12 டெப்போக்களில் இருந்தும் இன்று காலை வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு டெப்போக்களில் இருந்து பஸ்கள் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டது. 
வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை, மதுரை மற்றும் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. களியக்காவிளை, தக் கலை, மார்த்தாண்டம் பகுதிகளுக்கும் பஸ்கள் வழக்கம்போல் புறப்பட்டு சென்றது. கன்னியாகுமரி உள்பட அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ்கள் வழக்கம் போல் ஓடியது. 

ராணித்தோட்டம் டெப்போ, செட்டிகுளம் டெப்போ, விவேகானந்த புரம் டெப்போ உள்பட மாவட்டத்தில் உள்ள 12 டெப்போக்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. 

நாகர்கோவிலில் இன்று காலை வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தன. வடசேரி, கோட்டார், மீனாட்சிபுரம் பகுதிகளில் டீக்கடைகள் முதல் வணிக நிறுவனங்கள் வரை திறந்து செயல்பட்டது. பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. மார்த்தாண்டம், தக்கலை, கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுமே கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தது. 
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இன்று வங்கிகளுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். பெரும்பாலான வங்கிகளில் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ்அணிந்து பணிபுரிந்தனர். 
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான அருமனை, மேல்புறம், பத்துகாணி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் குளச்சல், குழித்துறை, குலசேகரம் பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. 

மேலும் மாவட்டம் முழுவதும் 26 இடங்களில் இன்று போராட்டமும் நடந்தது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...