"அதுக்கு மட்டும் நான் வேணும்.. கலயாணம் பண்ணிக்க மாட்டியா" என்று கேட்டு தகாத உறவில் ஈடுபட்ட 40 வயது பெண், இளைஞரை கொலை செய்ய முயன்றத...
"அதுக்கு மட்டும் நான் வேணும்.. கலயாணம் பண்ணிக்க மாட்டியா" என்று கேட்டு தகாத உறவில் ஈடுபட்ட 40 வயது பெண், இளைஞரை கொலை செய்ய முயன்றது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

கொடைக்கானல் அருகே வசித்து வந்த பெண் பிரமிளா.. 40 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. ஆனால் கணவனை இழந்தவர்.. அவர் இறந்து 6 வருஷமாகிறது.
அதே கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்.. 24 வயதாகிறது.. டிரைவர் வேலை பார்க்கிறார்.. கொடைக்கானல் சுற்றுலா தளம் என்பதால்,சீசனுக்கு வண்டி ஓட்டுவார்.. பயணிகளுக்கு கைடு அதாவது வழிகாட்டியாகவும் வேலை பார்த்து வந்தார். அப்போதுதான், பிரமிளாவுக்கும், பிரதீப்புக்கும் நட்பி அறிமுகமானது.
தனிமையில் வசித்து வந்த பிரமிளாவுக்கு பிரதீப்தான் நிறைய உதவிகளை செய்வார்.. கடைக்கு போவது, பேங்குக்கு போவது என சின்ன சின்ன உதவிகளை செய்து வரவும், அதுவே கள்ளக்காதலாக மாறியது.. நெருக்கமாக பழகினர்.. ஒரே வீட்டில் பலமுறை ஜாலியாக இருந்தனர்.
இந்த விஷயம், பிரதீப் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.. 40 வயதான அதுவும் ஒருவிதவை பெண்ணுடன் மகன் பழகுவது தெரிந்து கண்டித்தனர்.. அந்த உறவை நிறுத்திவிடுமாறு சொல்ல, மகனுக்கு வேறு ஒரு இடத்தில் அவசர அவசரமாக வேறு பெண்ணை பார்த்தனர்.. இதை பற்றி பிரதீப் பிரமிளாவிடம் சொல்லி உள்ளார்.. அப்போதுதான் இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.. ஆனால், ஒரு கட்டத்தில் சமாதானம் ஆகிவிட்டனர்.
இதற்கு நடுவில்தான் தீபாவளி வந்தது.. அன்றைக்கு பிரதீபும், பிரமிளாவும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடி உள்ளனர்.. அந்த நேரத்தில் மறுபடியும் பிரதீப்பின் கல்யாண பேச்சு வந்தது.. இதனால் ஆத்திரம் அடைந்த பிரமிளா, "என்னை விட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.. இப்பவே எனக்கு தாலி கட்டு... இப்படியே இந்த வீட்டிலேயே ஒன்னா வாழணும்" என்று வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு பிரதீப் மறுக்கவும், ஆத்திரமடைந்த பிரமீளா, கிச்சனில் இருந்து கத்தியை எடுத்து பிரதீப்பின் தலையிலும், மார்பிலும் சரமாரியாக குத்திவிட்டார்.. இதில் நிலைகுலைந்த பிரதீப் கதறி துடித்து கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.. அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடிவந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு இப்போது பிரதீப்புக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. தன் மகனை பிரமிளா கத்தியால் குத்தியது பற்றி பிரதீப்பின் பெற்றோரே கொடைக்கானல் போலீசாரிடம் புகார் தந்தனர்.. அதன்பேரில் பிரமிளா மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
No comments