அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான (TN Assembly Polls 2021) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6,...
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான (TN Assembly Polls 2021) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,01,12,370 பேரும், பெண்கள் 3,09,25,603 பேரும் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் 6,385 பேரும் இருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் (Election Draft List) வெளியீடு. காலை 11:30 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டனர்.
உங்கள் பெயர் இடப்பெற்றிருக்கிறதா? உங்கள் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை கீழே கொடுக்கப்பட்டு உள்ள இணைதளம் மூலம் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
https://www.elections.tn.gov.in/
உங்கள் மாவட்டம் பற்றிய முழு விவரங்களை அறிந்துக்கொள்ள, இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.elections.tn.gov.in/rollpdf/SSR2020_16112020.aspx
அதேபோல இம்மாதம் 21, 22 ஆம் நாள்களிலும் மற்றும் அடுத்த மாதம் 12,13 ஆம் நாட்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே வாக்காளர் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் நான்கு நாள் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை (TN Assembly Elections 2021) நடைபெற உள்ளதையொட்டி ஜனவரி மாதம் 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments