தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தன கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச சுற்றுலா தலமா...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தன

கொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வார இறுதி நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்தாண்டு சபரிமலை சுற்றுலா சீசன் இல்லாததால் களையிழந்து காணப்படும் கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டநிலையில் இதுவரை படகுசேவை தொடங்க வில்லை.
இந்நிலையில் பல்வேறு கட்டுபாடுகளுடன் தீபாவளி பண்டிகை கடந்த 14 ம்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அன்று மாலையில் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மாலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கடற்கரை, சன்செட்பாயின்ட் போன்ற இடங்களில் குவிந்தனர்.
மேலும் காந்திமண்டபம் எதிரேயுள்ள முக்கோணபூங்கா அருகில் இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டது. கார், வேன் போன்ற சுற்றுலா வாகனங்கள் கடற்கரைசாலை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்திலும் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது.
No comments