ஆறு மாத கருவை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகம் திருப்பத்தூரில் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோல...
ஆறு மாத கருவை கலைக்க கொடுக்கப்பட்ட விஷத்தால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்த சத்தியவதனம்(25) என்ற பெண்ணுக்கும், ஆண்டியப்பனூரை சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
பஞ்சாபில் பணியாற்றி வந்த மணிவண்ணன், மனைவியையும் உடன் அழைத்துச்சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில், ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை திடீரென ஊருக்கு அழைத்து வந்த மணிவண்ணன், தனது தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து குழந்தையை கலைக்க விஷம் கொடுத்துள்ளார்.
அதனை குடித்த சத்தியவதனாவிற்கு கருக்கலைந்த நிலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில் சத்தியவதனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மணிவண்ணன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடினார். புகாரின் பேரில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சத்தியவதனாவை திட்டமிட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ள அவரது உறவினர்கள், மணிவண்ணன் மற்றும் உடந்தையாக செயல்பட்ட அவருடைய அக்கா, அவருடைய தாயாரை கைதுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments