கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா(34). இவரது கணவர் இல்லாத நிலையில் பிறந்த 3 குழந்தைகளில் 2 குழ...
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா(34). இவரது கணவர் இல்லாத நிலையில் பிறந்த 3 குழந்தைகளில் 2 குழந்தைகள் இவரது தங்கை பாதுகாப்பில் உள்ளனர்.

மூன்றாவதாக பிறந்த 7 வயது சிறுவனை சசிகலா வளர்த்து வந்தார். இந்த நிலையில் தக்கலையைச் சேர்ந்த முருகன் என்பவருடன் சசிகலாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பழக்கம் நெருக்கமாகி இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசகமாக இருந்து வந்தனர். பின்னர் காஞ்சாம்புரம் என்ற இடத்தில் ஒரே வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்தனர்.
கடந்த 10 மாதங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு சிறுவன் இடையூராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சிறுவனுக்கு போதிய உணவு கொடுக்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் இருந்த முருகன், சிறுவனை தாக்கியுள்ளார். இதில் முதுகு, கை, கால், தொடை உள்ளிட்ட பகுதிகளில் கடித்தும் வைத்துள்ளார்.

இதனால் வலியால் சிறுவன் அலறியுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டதோடு நித்திரவிளை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
சசிகலாவிடம் சிறுவனுக்கு நடத்தப்பட்ட சித்ரவதைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான முருகனைத் தேடி வருகின்றனர்.
No comments