சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்று அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி விரக்திபட தெரிவித்துள்ளார். பதிமூன்றாவத...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்று அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி விரக்திபட தெரிவித்துள்ளார்.

பதிமூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திங்கள் இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராகப் படுதோல்வி அடைந்த சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.
இந்தப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது பேசிய தோனி கூறியதாவது:-
அணியில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது நல்லதல்ல. அது வீரர்களிடையே ஒருவித பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தும். அப்படியான உணர்வு வீரர்களின் அறையில் இருக்கக் கூடாது. உண்மையை சொல்வதென்றால் இந்த ஆண்டு எங்களுக்குச சரியானதாக அமையவில்லை.
அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதன் காரணமாகவே அவர்களை போட்டியில் களமிறக்கவில்லை. ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். போட்டிகளில் அவர்கள் எந்தவித அழுத்தம் இல்லாமல் விளையாடலாம்.
எல்லா நேரங்களில் நாம் நினைத்தது போலவே நடக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆட்டத்தின் முடிவை வைத்துதான் எங்கே தவறு நடக்கிறது என்பதை கண்டறிய முடியும். போட்டி முடிவுகள் வீரர்களின் மனநிலையை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments