நோக்கியா தொழிற்சாலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட நோக்கியா 3310 மாடல் செல்போனுக்கு வயது இருபது அதை இணையத்தில் 90 கிட்ஸ் உள்ளிட்டோர் கொண்...
நோக்கியா தொழிற்சாலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட நோக்கியா 3310 மாடல் செல்போனுக்கு வயது இருபது அதை இணையத்தில் 90 கிட்ஸ் உள்ளிட்டோர் கொண்டாடி வருகின்றனர்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் நகரில் உள்ள நோக்கியா தொழிற்சாலையில் தான் 3310 மாடல் போன் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது. அந்த போன் கண்டுபிடித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.
தற்போது எத்தனையோ ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. ஆனாலும் 3310 போனில் மவுசு இளைஞர்கள் மத்தியில் குறையவில்லை.
சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் அதைப் பற்றிய நீங்காத நினைவுகளை வெளியிட்டுவருகின்றனர் . செல்ஃபோனின் சிறப்பு குறித்து ட்விட்டரில் பலரும் பதிவிட்டுள்ளனர் . உலகெங்கும் 12 கோடியே 60 லட்சம் 3310 மாடல் ஃபோன்கள் விற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
செல்போன் புழங்க தொடங்கிய புதிதில் 3310, 1100 ஆகிய போன்கள் மிகவும் பிரபலம். அந்த பழைய நினைவுகளை தான் தற்போது இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
No comments