Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

கட்சி மேலிடம் வாய்ப்பு தந்தால் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட தயார்: களத்தில் குதிக்கிறார் நயினார் நாகேந்திரன்

கட்சி மேலிடம் வாய்ப்பு தந்தால் கன்னியாகுமரி எம்பி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளதாக நெல்லையில் பாஜ தென்மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்த...

கட்சி மேலிடம் வாய்ப்பு தந்தால் கன்னியாகுமரி எம்பி தொகுதியில் போட்டியிட தயாராக உள்ளதாக நெல்லையில் பாஜ தென்மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாஜவில் தற்போது மாநில செயற்குழு, மாவட்ட செயற்குழுவை தொடர்ந்து மண்டல அளவிலான உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும், ஒருவேளை தனியாக நின்றால் சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கூடுதல் சீட் கேட்டோம். ஆனால் 5 தொகுதிகள் தான் கிடைத்தது. வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம். அரசியல் கட்சிகள் தனித்து நிற்கும் போதுதான் வாக்கு வங்கியை அறிய முடியும். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி மாறி போட்டியிட்டுள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பதை இப்போது கூற முடியாது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரப்போகிறது. அதில் பாஜ சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுபவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். கன்னியாகுமரியில் பாஜவில் பல சீனியர்கள் உள்ளனர். கட்சி மேலிடம் வாய்ப்பு தந்தால் கன்னியாகுமரி தொகுதியில் நான் போட்டியிட தயாராக உள்ளேன். தேர்தல் காலத்தில் சிலர் கட்சியில் இருந்து வெளியேறுவதும், சிலர் மாற்று கட்சியில் இருந்து வருவதும் வாடிக்கைதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருபவர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். கடந்த 2014 தேர்தலில் தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே பாஜ வெற்றி பெற்றது. அப்போது 5 ஆண்டுகள் பாஜ ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் 2019 தேர்தலில் பாஜ மத்தியில் ஆட்சியை பிடித்த போதிலும், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் வசந்தகுமாரிடம் தோற்றார். தற்போது வசந்தகுமார் மரணத்தால், கன்னியாகுமரி தொகுதிக்கு அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து போட்டியிட்டு வரும் கன்னியாகுமரி தொகுதி மீது நயினார் நாகேந்திரன் பார்வையை திருப்பி உள்ளது பாஜவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த எம்பி தேர்தலில் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். தற்போது கன்னியாகுமரி எம்பி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இதற்கு தமிழக தலைவர்களின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.
அது குறித்த தனது விருப்பத்தையே பேட்டியில் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தான் நயினார் நாகேந்திரன் தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது திடீர் ஆசை, பாஜ தலைவர்கள் மத்தியில் விவாதப் பொருளாகி உள்ளது. ஆனால் கட்சியில் சீனியரான பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியை விட்டுக் கொடுப்பாரா, மேலிடத்திடம் செல்வாக்கை பயன்படுத்தி தொகுதியை கேட்டுப் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...