குமரி கேரள எல்கை சோதனை சாவடியான களியக்காவிளை சோதனை சாவடியில், பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டனர். கேரள மாநிலம் திரு...
குமரி கேரள எல்கை சோதனை சாவடியான களியக்காவிளை சோதனை சாவடியில், பெங்களூரில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாகடை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ஜான். இவர் தனது மனைவி எஸ்தர் மற்றும் இரண்டு குழந்தைகளோடு தமிழக கேரள எல்லை சோதனை சாவடியை தாண்டி தமிழகம் செல்ல களியக்காவிளை வந்தார். அந்த நேரத்தில் அவருடன் வந்த பெண் குழந்தை தொடர்ந்து அழுவதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
ஆனால், அந்த தம்பதி பெண் குழந்தை அவர்கள் குழந்தை என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களுடன் வந்த ஆறு வயது ஆண் குழந்தையிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 25 தினங்களுக்கு முன்பு பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் இருந்து பெண் குழந்தைக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து அந்த குழந்தையை கடத்தி வந்ததாக அந்த சிறுவன் தெரிவித்தான்.
இதை தொடர்ந்து அவர்களை களியக்காவிளை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரண்டு குழந்தைகளையும் நாகர்கோவில் காப்பகத்தில் சேர்ந்தனர். மேலும், அந்த ஆண் குழந்தையும் அவர்களது குழந்தை என்று அந்த தம்பதி தெரிவித்து வருகின்றனர்.
அந்த குழந்தை அவர்களது குழந்தையா, அல்லது அந்த குழந்தையும் கடத்தல் குழந்தையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த இரண்டு குழந்தைகள் பெயரில் போலி ஆதர்கார்டு தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதனிடையே கர்நாடகாவில் இருந்து காணாமல் போன குழந்தையின் தாயார் குழந்தையை காணவில்லை என குழந்தையின் போட்டோவுடன் காவல் துறை வெளியிட்ட வீடியோ வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்திரிநாத் கர்நாடக போலீசாருக்கு தகவல் தெரிவித்து கர்நாடக போலீசாரும் அந்த குழந்தையின் தாயும் அங்கிருந்து களியக்காவிளை வர உள்ளனர். இதனிடையே தக்கலை சரக டிஎஸ்பி ராமசந்திரன் தலைமையில் இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணையை துரிதபடுத்தி உள்ளனர்.
No comments