மணவாளக்குறிச்சியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் போதிய ஆதாரமில்லை என கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை என வழங்கப்பட்ட தீர்ப்பை...
மணவாளக்குறிச்சியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் போதிய ஆதாரமில்லை என கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை என வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மணவாளக்குறிச்சி கிளைத் தலைவர் அஸிம் தலைமை தாங்கினார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
கிளை பொருளாளர் இப்ராகிம் நன்றி கூறினார்.கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments