மணவாளக்குறிச்சியில், பெரியகுளம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி லெனினிஸ்ட் போராட்டம் நடைபெற்றது. மணவாளக்குறிச்சி பெரியகுளத்தில் 100 ஏக்கர் ...
மணவாளக்குறிச்சியில், பெரியகுளம் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி லெனினிஸ்ட் போராட்டம் நடைபெற்றது.

மணவாளக்குறிச்சி பெரியகுளத்தில் 100 ஏக்கர் பரப்பு ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும் என கேட்டும், விவசாயிகளை பாதிக்கும் மத்தியரசின் புதிய விவசாய மசோதாவை வாபஸ் பெற கேட்டும், ரயில்வே, விமானம், எல்.ஐ.சி., பி.எஸ்என்.எல்., எண்ணை நிறுவனங்கள், சுரங்கம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் போராட்டம் நடந்தது.
ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட தலைவர் சுசீலா, புரட்சிக்கர இளைஞர் கழக தலைவர் சீனிவாசன், லெனினிஸ்ட் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் மரிய கிறிஸ்டினாள், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசிய குழு உறுப்பினர் கார்மல், கட்டுமான தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஸ்டீபன், துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் ஞானசெல்வம், மரிய செல்வி, தேவ அருள் ரவி, அருள் டேவிட், பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments