கொரோனா ஊரடங்கு காலத்திலும் அப்துல் கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையாற்றி வரும் புதுச்சேரி இளைஞரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர...
கொரோனா ஊரடங்கு காலத்திலும் அப்துல் கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையாற்றி வரும் புதுச்சேரி இளைஞரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அப்துல் கலாமை தீவிரமாக பின்பற்றும் புதுச்சேரி பத்துக்கண்ணு அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் மணிகண்டன் கலாம் அறக்கட்டளையை நிறுவி கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
தனது சொந்த செலவில் இரண்டு ஆம்புலன்ஸ்களை வாங்கி 'கலாம் அறக்கட்டளை' என்ற பெயரில் மக்களுக்கு இலவசமாக சேவையாற்றி வருகிறார். இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வாகன சேவைக்காக மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்கிறார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் மணிகண்டன் வீட்டுக்குச் செல்லாமல் ஆம்புலன்ஸிலேயே தங்கியபடி அயராது சேவை புரிந்து வருகிறார். இவருடைய இந்த சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தன் உடன் பிறந்த சகோதரர் வாகன விபத்தில் சிக்கிய போது பல மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அவர் உயிரிழந்தார் என்றும், அதனால் தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் சேவையாற்றி வருவதாக கூறுகிறார்.
No comments