மணவாளக்குறிச்சியில் திமுக சார்பில் 40 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தமிழக திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் ஆணை...
மணவாளக்குறிச்சியில் திமுக சார்பில் 40 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் ஆணையின்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான என்.சுரேஷ்ராஜன் வழிகாட்டுதலின் படி குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு நிவாரண நலஉதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மணவாளக்குறிச்சி பேரூர் சார்பில் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குட்டி ராஜன் தலைமையில், மணவை பேரூர் செயலாளர் நிஜாம் மற்றும் மாணவர் அணி செயலாளர் அஜித்குமார் ஆகியோர் முன்னிலையில் மணவாளக்குறிச்சியில் ஆட்டோ ஓட்டிவரும் 40 ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

அதன்படி, அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments