Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:
latest

Ads Place

தொடர்ந்து 3-வது முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஹெச்.வசந்தகுமார் எம்.பி. முதலிடம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான ஹெச்.வசந்தகுமார் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவத...

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான ஹெச்.வசந்தகுமார் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
17-வது மக்களவை 2019 ஜூன் 17-ல் முதல் அமர்வைத் தொடங்கியது. 2020 மார்ச் 23 வரை மூன்று கூட்டத் தொடர்களில் 80 அமர்வுகள் நடந்தன.
கன்னியாகுமரி எம்.பி.யான நான் (ஹெச்.வசந்தகுமார்) 40 விவாதங்களில் கலந்துகொண்டு 103 கேள்விகளை எழுப்பியும், 2 தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்தும் முதலிடத்தில் உள்ளேன். மொத்தக் கூட்டு மதிப்பு 145. நான் 88 சதவீத அமர்வுகளில் பங்கேற்றுள்ளேன். இது தேசிய அளவில் 25-வது இடமாகும்.
சுய முயற்சியில் பங்கேற்கும் விவாதங்களில் (பூஜ்ஜிய நேரம், விதி எண் 377 உட்பட) தேசிய அளவில் 10-வது இடம் வகிக்கிறேன். 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் இருந்து இதுவரை 3 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. இந்த மூன்றிலும் நானே முதலிடம் வகிக்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்