மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள...
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலகில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கிய நாள் முதல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அரசு மற்றும் சுகாதார துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.
ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தினக்கூலிகள் மற்றும் ஏழைகளின் பசியைப் போக்கும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழகம் முழுவதும் இதுவரை 8995 குடும்பங்களுக்கு ரூபாய் 86,30,560 மதிப்பிலான உணவு பொருட்கள் அரசு வலியுறுதியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிவாரணப் பணிகளின் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யக்கூடிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்தும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (PPE) வழங்க பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 500 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (23-04-2020) வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி, பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமியிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வின் போது பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் M. நாகூர் மீரான், மாநில மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் M.அப்துல் ரசாக், தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments