உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிகமுக்கிய பண்டிகை ரமலான் பண்டிகை. இதற்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருப்பர். இஸ்ல...
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிகமுக்கிய பண்டிகை ரமலான் பண்டிகை. இதற்காக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருப்பர்.

இஸ்லாமிய மாதங்கள் ஒவ்வொன்றும் பிறை தோன்றுவதை வைத்து கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஹிஜ்ரி வருடம் ஷாபான் மாதம் முடிந்து, ரமலான் மாதம் ஆரம்பமாகிறது.
ரமலான் மாதத்தின் முதல் பிறை (சந்திரன்) கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இன்று தென்பட்டதை தொடர்ந்து கேரளம் மற்றும் குமரி மாவட்டத்தில் நாளை முதல் ரமலான் துவங்குகிறது.
இதற்கான அறிவிப்பை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத் பள்ளிவாசலிலும் தெரிவிக்கப்பட்டது.
30 நாட்கள் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படும் ரமலான் நோன்பில் ஒவ்வொரு நாளும் இரவு சிறப்பு தொழுகை நடைபெறும். ஆனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், சிறப்பு தொழுகை பள்ளிவாசலில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு தொழுகையை அவரவர் வீடுகளிலேயே தொழுது கொள்ளும்படி ஜமாஅத் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments