உகாண்டாவில் வாழும் தமிழர்களுக்கான மாபெரும், கிரிக்கெட் திருவிழா, தலைநகர் கம்பாலாவில் உள்ள நகாவா மப்ஸ் கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் வைத்து ஆ...
உகாண்டாவில் வாழும் தமிழர்களுக்கான மாபெரும், கிரிக்கெட் திருவிழா, தலைநகர் கம்பாலாவில் உள்ள நகாவா மப்ஸ் கிரிக்கெட் ஓவல் மைதானத்தில் வைத்து ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது.
![]() |
Kumari Team |
இந்த போட்டியில் மொத்தம் 6 டீம்கள் களம் இறங்கின. திருச்சி லிபர்டி அணிக்கு கேப்டன் மற்றும் ஓனர் சமீர், கோவை சேலஞ்சர் அணிக்கு ஓனர் முஹம்மது வாஹிது, கேப்டன் சாதிக் சாலி, நெல்லை நம்ம மக்கா அணிக்கு ஓனர் மற்றும் கேப்டன் டாக்டர் வெங்கட கிருஷ்ணன், குமரி லேய் மக்கா அணிக்கு ஓனர் மற்றும் கேப்டன் காதிரி, மதுரை அணிக்கு ஓனர் டாக்டர் முஹம்மது ராஃபி மற்றும் கேப்டன் அன்சாரி, சென்னை அணிக்கு ஓனர் உமா சங்கர் மற்றும் கேப்டன் ஸ்டாலின் ஆகியோர் இருந்தனர்.

ஆரம்பம் முதலே விறுவிறுப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி சுற்றில் சென்னை அணியும், குமரி அணியும் மோதின. டாஸ் வென்ற குமரி ஏலே மக்கா அணி, முதலில் பீல்டிங் செய்தது.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Chennai Team |
பேட்டிங் செய்த சென்னை அணி 6 ஓவருக்கு 77 ரன் எடுத்து 2 விக்கெட் இழப்புக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் விஸ்வரூம் எடுத்து விளையாடிய குமரி அணி 5.4 ஓவருக்கு 78 ரன்கள் எடுத்து 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்றது.
![]() |
Total Teams |

News & Photos
Dr. N. Venkata Krishnan
Managing Director
Katon Manufacturers Limited
Kampala, Uganda

No comments