மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மன்சூர். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஷாருக். இவர் அந்த பகுதியில் மேல்நிலைக் கல்வி...
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மன்சூர். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஷாருக். இவர் அந்த பகுதியில் மேல்நிலைக் கல்வி பயின்று வருகிறார்.

ஷாருக், சிறு வயது முதலே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தன் தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நடனத்தில் சிறந்து விளங்குகிறார். தத்ரூபமாக படம் வரைவதில் பலரின் பாராட்டை பெற்றவர்.
டிக்டாக் மற்றும் சமூக இணையதளங்கள் மூலம் தனது நடனம், நடிப்பு திறமையை வெளிபடுத்தி வந்தார். இந்நிலையில் இவரின் நடிப்பு திறமையை அறிந்த கேரள சின்னத்திரை இயக்குநர், தன்னுடைய வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாருக்கை நடிக்க வைக்க அணுகியுள்ளார்.
அதுவரை சமூக தளங்களில் மட்டுமே, தனது திறமைகளை வெளியிட்டு கொண்டிருந்த ஷாருக், உடனே அந்த சின்னத்திரை வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார்.

அவர், முதலில் நடித்து வெளிவர இருக்கும் வெப் தொடர் “லவ் ப்ரேமம், காதல்” என்ற தலைப்பில் வெளிவர இருக்கிறது. இது கேரள, தமிழ் கலாச்சாரத்தோடு பின்னிய கதையை கொண்ட தொடர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் மிகவிரைவில் வெளிவர உள்ளது.
அதனை தொடர்ந்து மலையாள பிரபல தொலைகாட்சியில் புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளது. விரைவில் அந்த தொடரின் ஷூட்டிங் துவங்கும் நிலையில் உள்ளது.
அதோடு, தமிழில் பிரபல கதாநாயகர்களை வைத்து படம் தயாரித்த, பிரபல நிறுவனம் ஓன்று மிகமுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான ஆடிஷன் முடிந்து, இறுதி தேர்வில் தேர்வாகியுள்ளார். அதற்கான படபிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இதன்மூலம் பெரிய திரையில் கால்பதிக்கிறார்.
நம்ம ஊர் இளம் நாயகன் “ஷாருக்” திரைத்துறையில் பல வெற்றிகளை அடைந்து, உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகிறோம்.
No comments