குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இளைஞர் காங்கிரசார் மீது நடத்திய தடியடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் த...
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இளைஞர் காங்கிரசார் மீது நடத்திய தடியடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் அகிம்சை வழியில் பாதயாத்திரை நடத்துவதற்கு காவல்துறையினரிடம் உரிய அனுமதி கோரப்பட்டது.
இந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள காமராஜர் சிலையிலிருந்து புறப்பட்டு ஊர்வலமாக இரணியல் சந்திப்பு வரை செல்வதற்கான முறையான அனுமதியை காவல் துறையினரிடம் இடையூறு இல்லாமல் பாதயாத்திரை செல்ல முயன்றுள்ளனர்.
அவர்களை குளச்சல் காவல்நிலையம் அருகில் தடுத்து நிறுத்திய காவல்த்துறையினர் ஜனநாயகத்திற்கு விரோதமாக, அவர்கள் மீது தடியடி நடத்தி காயப்படுத்தி உள்ளனர்.
அதோடு, பொய்யான வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளனர். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது. தடியடியினால் பாதிக்கப்பட்டு காயம் அடைந்துள்ள நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் குறைந்தபட்ச மருத்துவ சகிச்சை பெறுவதற்குக் கூட அனுமதிக்காமல் சிறை பிடித்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்.
இது முழுக்க முழுக்க பாஜ மற்றும் சங்பரிவார் அமைப்பை சார்ந்தவர்களால் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே உள்ளூர் காவல்துறையினர் இத்தகைய மனிதாபிமானமற்ற அராஜக செயலில் ஈடுபட்டுள்ளார்கள். இது மனித உரிமை மீறலாகும்.
மாவட்டக் காவல்த்துறை அதிகாரி இதுகுறித்து உரிய விசாரணை செய்து, இளைஞர் காங்கிரசார் மீது தடியடி நடத்தி, பொய்யான வழக்குகளை பதிவு செய்த சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது, துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்த்துறை, அரசியல் அழுத்தத்திற்கு பலியாகாமல் நேர்மையுடன் காவல்துறையின் கண்ணியத்தையும், அதன் மாண்புகளையும் பாதுகாக்கும்படி வேண்டுகிறேன்.
காவல்த்துறை முற்றிலும் அரசியல் சார்பற்றது என்கின்ற நற்பெயரையும் பெற வேண்டுமென்று பெரிதும் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments