தனியாா்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்றனி வ...
தனியாா்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்றனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம், மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் மாா்ச் 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
இதில், பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளா்களை தோ்வு செய்கின்றனா்.
இதில், 8, 10 , 12ஆம் வகுப்புகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, கல்வியியல் பட்டப்படிப்பு தகுதியுள்ள வேலை தேடுவோர், காலை 9 மணி முதல் கல்லூரி வளாகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 04652-264191 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments