Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

வேலை வாய்ப்பு

கூடங்குளம் அனுமின் நிலையத்தில் டிரைவர் பணி மத்திய அரசின் அணு சக்தி துறையின் செயல்படும் பொதுத்துறை நிறுனமான கூடங்குளத்தில் உள்ள அனுமின்நிலையத...

கூடங்குளம் அனுமின் நிலையத்தில் டிரைவர் பணி

மத்திய அரசின் அணு சக்தி துறையின் செயல்படும் பொதுத்துறை நிறுனமான கூடங்குளத்தில் உள்ள அனுமின்நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Driver cum Pump Operator Cum Fireman 'A' (12 காலியிடங்கள்)
வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும். (எஸ்சி. ஒபிசி., பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்).
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தீயணைப்பு துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதி: உயரம் - குறைந்தபட்சம் 50 கி.கி, மார்பளவு - 81 செ.மீ, பார்வை 6/6 என்ற நிலையில் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள விண்ணபபப் படிவ மாதிரியை ஏ4 அளவுத்தாளில் தயார் செய்து, குறிப்பிட்ட இடத்தில் தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, பூர்த்திச் செய்ய வேண்டும். கல்வி தகுதி, பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை http://www.npcil.nic.in/main/JobsRecent.aspx என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 9 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Deputy Manager (HRM). Nuclear Power Corporation of India Limited, Kudankulam Nuclear Power Project. Kudankulam Post. Radhapuram Taluk. Tirunelveli - 627 106 என்ற முகவரிக்கு விண்ணப்கங்களை அனுப்ப வேண்டும்.

ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பணி வாய்ப்பு

கோட்டூரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில், காலியாக உள்ள பேராசிரியர், ரீடர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: பேராசிரியர் - 6 இடங்கள், ரீடர் - 8 இடங்கள்
தகுதி: எம்.டி.,ஆயுர்வேத படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 01.07.12 அன்று 65 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
பணிஅனுபவம்: பேராசிரியர் பணிக்கு அங்கீகாரம் பெற்ற ஆயூர்வேத மருத்துவ கல்லூரியில் 10 வருட ரீடர் அல்லது துணை பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ரீடர் பணிக்கு அங்கீகாரம் பெற்ற ஆயூர்வேத மருத்துவ கல்லூரியில் 5 வருடம் பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டு
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தட்டச்சு படித்தவர்களுக்கு புகையிலை வாரியத்தில் கிளர்க் பணி

மத்திய அரசின் வணிகத் துறையின் கீழ்  இயங்கும் குண்டூர் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: LDC (11இடங்கள்)
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் Lower Grade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடங்களுக்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.
வயது: 2012 செப்டம்பர் மாதம் 30 வயத்திற்குள் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஓபிசி பிரினருக்கு 3 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பொதுப்பிரிவினர் ரூ.100, Secretary Tobacco Board. Guntur என்ற பெயரில் டிடியாக எடுக்க வேண்டும். (எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது).
விண்ணப்பிப்பவர்கள் ஏ4 அளவுத்தாளில் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி விண்ணப்பித்து முழு விவரம் அடங்கிய சுயவிவரம், இத்துடன் நிரந்திர முகவரி, கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு பதிவு எண் போன்றவை இணைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் அஞ்சல் உறையின் மீது Lower Division Clerk என்று குறிப்பிட வேண்டும்.
செப்டம்பர் 21ம் தேதிக்குள் Secretary, Tobacco Board, Post Box No.322, Srinibasarao Thota, G.T Toad. Guntur - 522 004, AP என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்