ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு உதவித் தொகை அதிகரிப்பு சென்னை அண்ணா நகரில், தமிழக அரசால் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்ச...
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு
உதவித் தொகை அதிகரிப்பு
சென்னை அண்ணா நகரில், தமிழக அரசால் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலம் தமிழகத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று, தேர்வில் வெற்றிப் பெற்று, அரசு உயர் அதிகாரிகளாக, தலைநகர் புது டில்லியிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணத்தை 2000 ரூபாயாக உயர்த்தியும், இனி வருங்காலங்களில், உணவுக் கட்டணத்தை ஆண்டுதோறும் ஐந்து விழுக்காடு உயர்த்துவற்கும், தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரசின் அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வில் பங்கு கொண்டு வெற்றி பெற்று, புது டில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதை, ஊக்குவிக்கும் வகையில், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு 3000 ரூபாய் வீதம் 3 மாதங்களுக்கு 200 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கவும் தமிழக முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி, புது டில்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கு கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு, பயணச் செலவினமாக தலா 2000 ரூபாய் வழங்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த தொலைநோக்கு நடவடிக்கைகளினால், தமிழக மாணவ மாணவியர் அதிக அளவில் அகில இந்திய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணிவாய்ப்பை எளிதில் தட்டி செல்ல உதவும் நூலக படிப்புகள்
கல்வியில் நாடு தன்னிறைவை அடைய கிராமங்கள் தோறும் நூலகம் திறப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. நூலகர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இளநிலை படிப்பை படித்து விட்டு வேறு ஏதாவது தொழில்கல்வி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு நூலகம் மற்றும் அறிவியல் படிப்பு சற்று மாறுபட்டதாகவே இருக்கும். எம்எல்ஐஎஸ்சி எனப்படும் நூலகவியல் படிப்பை முடித்தால் நூலகராக பணியாற்றலாம். ஏற்கனவே பல பல்கலைக்கழகங்கள் நேரடியாகவும், தொலைநெறியிலும் நூலகம் சார்ந்த இளநிலை, முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை அளித்து வருகின்றன. குறிப்பாக தொலைநெறியில் படிப்புகளை தேர்வு செய்பவர்கள் நூலக படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இப்படிப்பை முடித்தவர்கள் வேலைவாய்ப்பை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள், அரசு நூலகங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம்.
பிஎல்ஐஎஸ்சி படிப்பை மேற்கொள்ள பிகாம், பிஏ, பிஎஸ்சி, பிபிஏ உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒரு இளநிலைப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் மாணவர்கள் கலை அறிவியல் பட்டப்படிப்பை படித்து, ஏதேனும் ஒரு முதுநிலை அல்லது ஆசிரியர் படிப்பான பிஎட் முடித்து அதன் பிறகு போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்ட பிறகுதான் வேலைக்கு செல்ல முடியும். ஆனால் இந்த படிப்பை படித்து முடிக்கும் போதே அதற்கான வேலைவாய்ப்பும் காத்திருக்கிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பிஎல்ஐஎஸ்சி மற்றும் எம்எல்ஐஎஸ்சி போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எண்ணற்ற நூலகர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. தனியார் நூலகத்தில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், சமூக அறிவியல் ஆய்வு மையங்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே இப்படிப்பை தேர்வு செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை எளிதில் பெறும் வாய்ப்பு உள்ளது.
எம்பிஏ சாப்ட்வேர்.. அதிகரிக்கும் மவுசு
மேலாண்மை படிப்புகளில் நிறுவனங்களுக்கு தக்கவாறு பாடப்பிரிவுகள் உருவாகிக்கொண்டே செல்கின்றன. ஒரே பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புகளில் 15 பாடப்பிரிவுகள் வரை இருக்கின்றன. தங்களது திறமை, புரிதல் திறனுக்கேற்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில்தான் மாணவர்களின் பொறுப்பு அடங்கியுள் ளது. வேலையளிக்கும் நிறு வனங்களும் சம்பந்தப்பட்ட துறைகளில் எம்பிஏ முடித்தவர்களை வரவேற்கின்றன. நிறுவனங்களுக்கு தக்கவாறு ஊதியமும் பல்வேறு படிநிலைகளில் அதிகரிக்கின்றன. தற்போது சாப்ட்வேர் துறை சார்ந்த எம்பிஏ படிப்புகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. உலகளாவிய அளவிலும் இத்துறை சார்ந்த படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கேற்ப பல்வேறு பாடப்பிரிவுகள் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகின்றன. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள மேம்பட்ட கணினி வளர்ச்சி மையம், எம்.பி.ஏ., (மென் பொருள் நிறுவன மேலாண்மை) படிப்புக்கு மாண வர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஇ, பிடெக் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்க ளோடு தேர்ச்சி அல்லது எம்.எஸ்சி (சிஎஸ்/ஐடி/எலக்ட்ரானிக்ஸ்) படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்க ளோடு தேர்ச்சி அல்லது எம்சிஏவில் 60 சதவீத மதிப்பெண்க ளோடு தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை குறிப்பிட்ட சில இந்தியன் வங்கிக் கிளை களிலோ, தபாலிலோ பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பெற்று அத்துடன் ரூ.1100க்கான டிடி மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து ஏப். 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களை www.cdacnoida.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
No comments