நாகர்கோவிலில் மாயமான பெண் அணையில் சடலமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நாகர்கோவில் வடசேரி ராமவர்மன் புதுத்தெருவை சே...
நாகர்கோவிலில் மாயமான பெண் அணையில் சடலமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நாகர்கோவில் வடசேரி ராமவர்மன் புதுத்தெருவை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மனைவி கல்யாணி (வயது 51). கணவருடன் ஏற்படட கருத்து வேறுபாடு காரணமாக மூன்றரை ஆண்டுகள் அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதனால் ஏற்பட்ட மாணவருத்தத்தில், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கல்யாணி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் காணாததால், இதுகுறித்து அவரது மகள் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்யாணியை தேடிவந்தனர். இந்நிலையில் தென்தாமரை குளம் அருகே உள்ள பழையாற்றில் இருக்கும் மிஷன் அணையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.
இது குறித்து மக்கள் அப்பகுதி மக்கள் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சென்று சடலத்தை மீட்டனர். இறந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே வடசேரி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கல்யாணியின் குடும்பத்தினர், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து சடலமாக கிடந்தது கல்யாணி என்பது உறுதியானது.
உடலை பார்த்து அவரது மகள் மற்றும் குடும்பத்தார் கதறி அழுதனர். பின்னர் கல்யாணி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து, உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments