குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த இளம் ஓவியருக்கு கலை வளர்மணி விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அருமனை அருகே மஞ்சால...
குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த இளம் ஓவியருக்கு கலை வளர்மணி விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அருமனை அருகே மஞ்சாலுமூடு சிறக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா. இவரது மகன் ஸ்ரீராஜ் (31). இளம் ஓவியரான இவர் பல்வேறு அரிய வகை படைப்புகளை படைத்துள்ளார். உலக சாதனைக்காக புதிய முயற்சிகளை எடுத்து வருகிறார்.
தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறந்த ஓவிய கலைஞருக்கான கலை வளர்மணி விருதுக்கு அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விருதையும், 6 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையையும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஸ்ரீராஜிற்கு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அவரது தாயார் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments