மணவாளக்குறிச்சி பள்ளிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ராபி. இவர் மணவாளக்குறிச்சி பீச் ரோடு பகுதியில் ராபி ஏஜென்சீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வ...
மணவாளக்குறிச்சி பள்ளிதெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ராபி. இவர் மணவாளக்குறிச்சி பீச் ரோடு பகுதியில் ராபி ஏஜென்சீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இவருடைய மகன் முஹம்மது சமீம் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் பொறியியல் கல்வி பயின்று வருகிறார்.
இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநில மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்புடைய போஸ்டர் டிசைன் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் மாணவர்கள் தங்களது திறமையை கொண்டு போஸ்டர் டிசைன்களை உருவாக்கி கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த முஹம்மது சமீம், தான் உருவாக்கிய போஸ்டர் டிசைனையும் அளித்திருந்தார்.
நூற்றுகணக்கான போட்டியாளர்கள் பங்கெடுத்த இந்த போட்டியில் முதல் பரிசை முஹம்மது சமீம் உருவாக்கிய டிசைனுக்கு வழங்கப்பட்டது. கல்லூரி சார்பில் அதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முதல் பரிசு பெற்ற மாணவர் முஹம்மது சமீமை, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
No comments