மணவாளக்குறிச்சி அருகே கணவன் மனைவியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மணவா...
மணவாளக்குறிச்சி அருகே கணவன் மனைவியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(42). விவசாயி. இவருடைய சகோதரர் தர்மராஜன். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் வீட்டின் அருகே பொதுக் கிணறு உள்ளது. இதன் அருகிலிருந்து செல்லும் வழியை தர்மராஜன் மனைவி உமா, உமாவின் தந்தை ரத்தினசாமி அவருடைய தம்பிகள் ரமேஷ், அனீஸ் ஆகிய 4 பேரும் சேர்ந்து அடைத்தததாக கூறப்படுகிறது.
இதை கிருஷ்ணகுமார் அவருடைய மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 4 பேரும் சேர்ந்து கிருஷ்ணகுமார் அவருடைய மனைவி ஜெயலட்சுமி ஆகியோரை தாக்கியிருக்கிறார்கள்.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இது குறித்து கிருஷ்ணகுமார் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments