Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரி எல்லையில் நெஞ்சை உலுக்கும் பாசப்போராட்டம் - 14 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக தம்பி: காப்பாற்ற துடிக்கும் அண்ணன்

14 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் தம்பி, அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக சொத்துகளை விற்று காப்பாற்ற துடிக்கும் அண்ணன், இந்த பாசப்போராட்டத்தில் கட...

14 ஆண்டுகளாக படுத்த படுக்கையில் தம்பி, அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக சொத்துகளை விற்று காப்பாற்ற துடிக்கும் அண்ணன், இந்த பாசப்போராட்டத்தில் கடனாளியாகி நிர்கதியான நிலையிலும், உடன் பிறந்தவன் எழுந்து வந்து விட மாட்டானா? என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு.
எத்தனையோ பிரச்சினை, ஆண்டுகளும் உருண்டோடின, அதே சேவை, அதே பாசம். எள்ளளவும் தம்பி மீதான பரிவு குறையவில்லை. குமரி-கேரள எல்லையில் தான் இந்த நெஞ்சை உலுக்கும் பாசப்போராட்டம் அரங்கேறி வருகிறது.

குமரி-கேரள எல்லையில் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் லிஜோ (வயது 33). இவர் தனது 19 வயதில் பி.டெக் படித்து வந்தார். அப்போது திடீரென அவருக்கு வைரஸ் காய்ச்சல் உருவானது. இந்த காய்ச்சல் அவருடைய வாழ்க்கைையயே புரட்டி போட்டது என்றே கூறலாம்.
ஓடியாடி உற்சாகமாக வலம் வர வேண்டிய வயதில், சிகிச்சை பலனளிக்காததால் கை, கால்கள் செயலற்ற நிலைக்கு சென்று படுத்த, படுக்கைக்கு தள்ளப்பட்டார். 3 வருடங்களாக அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தும், எந்தவித முன்னேற்றமும் இல்லை. வெண்டிலேட்டர் சிகிச்சையிலேயே லிஜோ உயிரோடு இருக்கிறார். அவரை எப்படியாவது இயல்பான நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு லிஜோ அண்ணன் விபின் போராடினார், போராடிக் கொண்டே இருக்கிறார்.

இந்த பாசப்போராட்டத்துக்காக விபின் சொத்துகளை இழந்தார், குடும்ப வாழ்க்கையை இழந்தார், கடனாளியானார், இதுவெல்லாம் தன்னுடைய ஒரே தம்பிக்காக என்று சொன்னால் அது மிகையாகாது.தம்பியை காப்பாற்ற டாக்டர்கள் கைவிட்ட நிலையிலும், அவருடைய சொந்த பந்தம் கைதூக்கி விடாத நிலையிலும் 14 வருடமாக தம்பிக்காக ஒரு பாசப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இதுகுறித்து விபின் கூறுகையில், என்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் அண்ணா, சொத்துகளை விற்றாவது மீண்டும் என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடு அண்ணா என தம்பி லிஜோ உருக்கமாக பேசினான். அந்த குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு வார்த்தைக்காக அவனை காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறேன், படுத்த படுக்கைக்கு சென்றாலும் லிஜோவுடன் தினமும் பேசி மன உறுதியை ஏற்படுத்தி வருகிறேன்.

தம்பிக்காக சொத்துகளை இழந்த நான், வாடகை வீட்டில் உள்ளேன். அங்கு தம்பிக்கு வெண்டிலேட்டர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறேன். கழுத்துக்கு கீழே முழுவதும் செயல் இழந்து உள்ளான் என வேதனையுடன் தெரிவிக்கும் விபின், நான் இருக்கும் வரை என்னுடைய தம்பியை சாக விட மாட்டேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்த பாசப்போராட்டத்துக்கு இடையே விபினின் மனைவி மனநோயாளியாகி விட்டார். குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலை உருவானது, விபினின் வேலையும் பறிபோனது. ஏதாவது பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என கருதி சொந்த பந்தமும் விபினை விட்டு விலகியது. எனினும் விபின் துவண்டு போகவில்லை. தொடர்ந்து பாசப்போராட்டத்தை நடத்தி வருகிறார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...