Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

உயிரிழந்த மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி...! தகுதி அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எட...

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உயிரிழந்த மீனவர்கள், மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியின் அடிப்படையில் மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா, உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார், மண்டபத்தைச் சேர்ந்த சாம்சன் டார்வின் ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்கரையில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி செல்வதற்காக அங்கிருந்து வேகமாக புறப்பட்டபோது, மீனவர்களின் விசைப்படகு இலங்கையின் ரோந்து கப்பல் மீது மோதியதாக கூறப்பட்டது. 

இதில் படகுடன் சேர்ந்து மீனவர்கள் 4 பேரும் மூழ்கினர். அவர்களை பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கரை திரும்பிய கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நடந்த சம்பவம் பற்றி கூறினர். உடனே 3 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் மாயமான மீனவர்களை தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லை. 
அத்துடன் இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படையினர் படகு மூழ்கிய இடத்தில் தேடுதலை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே நேற்று நெடுந்தீவு அருகே விசைப்படகுடன் மூழ்கிய 4 பேரில் 2 மீனவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர். 

விசாரணையில் அவர்கள் பாம்பனை சேர்ந்த சாம்சன் டார்வின் மற்றும் செந்தில் குமார் என்று தெரியவந்தது. அவர்களின் உடல்களை இலங்கை கடற்படையினர் அவர்களது நாட்டிற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேலும் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது.
இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், அரசு விதிகளுக்கு உட்பட்டு, தகுதியின் அடிப்படையில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...