மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியில் நேற்று (19-01-2021) திமுக சார்பில் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற கிராம சபைக் கூட்டம் நட...
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை பகுதியில் நேற்று (19-01-2021) திமுக சார்பில் “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற கிராம சபைக் கூட்டம் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.
கூட்டத்தில் குமரி மாவட்ட திமுக செயலாளர் என். சுரேஷ்ராஜன், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் குட்டிராஜன், மணவாளக்குறிச்சி பேரூர் செயலாளர் நிஜாம், வெள்ளிமலை பேரூர் செயலாளர் தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மண்டைக்காடு பேரூர் செயாளர் தங்கராஜ், முட்டம் ஊராட்சி செயலாளர் அன்னியாஸ், குருந்தன்கோடு ஊராட்சி செயலாளர் பெர்வின் விஜய், வெள்ளிச்சந்தை ஊராட்சி செயலாளர் அந்தோணி ராஜ், மணவாளக்குறிச்சி பேரூர் இனைஞரணி அமைப்பாளர் அஜித் ரகுமான் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிராமசபை கூட்டத்திற்கு நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்;
No comments