மலேசியாவில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளம் தாயார் ஒருவர், தமது பிள்ளைகள் மூவரும் இறந்தது தெரியாமல் உயிருக்கு போராடி வருகிறார். மலேச...
மலேசியாவில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளம் தாயார் ஒருவர், தமது பிள்ளைகள் மூவரும் இறந்தது தெரியாமல் உயிருக்கு போராடி வருகிறார்.

மலேசியாவில் விடுமுறையை கழித்துவிட்டு திரும்பும் வழியில் ஏற்பட்ட கோர விபத்தில் தமது 7,3 மற்றும் 1 வயதுடைய மூன்று பிள்ளைகளும் மரணமடைந்துள்ளது தெரியாமல் 27 வயதான இளம் தாயார் நதியா அப்துல் ரஹீம் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுவரை ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என்றே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிறந்த கிராமத்திற்கு தமது மூன்று பிள்ளைகளுடன் விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பும் வழியில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
நதியா அப்துல் ரஹீம் தமது பிள்ளைகளுடன் வந்த கார் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கி நசுங்கியதாக கூறப்படுகிறது.
மீட்ப்புக்குழுவினர் வாகன பாகங்களை துண்டித்து, அதனுள் சிக்கியிருந்த தாயாரையும் மூன்று பிள்ளைகளையும் மீட்டுள்ளனர்.
விபத்தில் ஈடுபட்ட லாரியில் ஒன்று பழங்களுடனும், இன்னொருன்று மின்னணு பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
முதலில் அந்த லாரிகள் இரண்டும் மோதியதாகவும், ஆனால் இந்த லாரிகளுக்கு இடையே துரதிஷ்டவசாமாக நதியா அப்துல் ரஹீமின் கார் சிக்கிக்கொண்டதாகவும் போலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வேலை நிமித்தம் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், நதியா அப்துல் ரஹீம் தமது பிள்ளைகள் மூவருடன் கிராமத்திற்கு சென்று விடுமுறையை கழித்து திரும்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி மூன்று சிறுவர்களும் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக கூறும் போலிசார், தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
No comments