ராமஜென்மபூமி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி ஒதுக்கப்பட்ட 5 ஏக்கா் நிலத்தில் கட்டப்படும் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் ...
ராமஜென்மபூமி வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி ஒதுக்கப்பட்ட 5 ஏக்கா் நிலத்தில் கட்டப்படும் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சா்ச்சைக்குக்குரிய நிலம் தொடா்பான ராமஜென்மபூமி-பாபா் மசூதி வழக்கில் கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதில் அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்ட நீதிமன்றம் அனுமதியளித்தது.
அந்த வழக்கில் எதிா்தரப்பாக இருந்த சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் உள்ள வேறொரு இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்கா் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதற்கேற்ப சன்னி வக்ஃபு வாரியத்துக்கு அயோத்தியில் உள்ள தன்னிபூா் கிராமத்தில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது.
அந்த நிலத்தில் மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு சன்னி வக்ஃபு வாரியம் இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை அமைத்தது.
அந்த அறக்கட்டளை புதிதாக கட்டப்படவுள்ள மசூதி, மருத்துவமனை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பை நேற்று வெளியிட்டது.
No comments