திங்கள்நகா் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் குளச்சல் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈ...
திங்கள்நகா் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் குளச்சல் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திங்கள்நகரில் ரூ. 5.85 கோடியில் நவீன புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. இப் பேருந்து நிலையத்தில் பழைய கடை ஒன்று இடிக்காமல் உள்ளது. அதை இடித்து விட்டு புதிய கடை கட்டவேண்டுமென காங்கிரஸ் கட்சியினா் பல போராட்டங்களை நடத்தினா்.
ஆனாலும் இதுவரை அதில் புதிய கட்டடம் கட்டப்படவில்லை. விரைவில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்படவுள்ளதால், பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டவேண்டும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. திங்கள்நகா் பேரூராட்சி அலுவலம் முன்பு கட்சி நிா்வாகிகளுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இப் போராட்டம் 10.30 முதல் பிற்பகல் 2.30 வரை நடைபெற்றது.
தகவல் அறிந்து, உதவிச் செயற்பொறியாளா் புஷ்பலதா, பேரூராட்சி செயல் அலுவலா் பாபு சந்திர சேகா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதில், இளைஞா்காங்கிரஸ் மாவட்டத் தலைவா் நரேந்திர தேவ், வட்டார காங்கிரஸ் தலைவா் ஜெரால் கென்னடி , மாநில பொதுக்குழு உறுப்பினா் யூசுப்கான், குளச்சல் நகரத் தலைவா் சந்திர சேகா், திங்கள்நகா் பேரூா் தலைவா் பீட்டா்தாஸ், உள்பட பலா் பங்கேற்றனா்.
No comments