மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (வயது 50). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் வீட்டில்...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அழகன்பாறை காளிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (வயது 50). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் வீட்டில் நாட்டு கோழிகள் மற்றும் வான் கோழிகள் வளர்த்து வருகிறார். கடந்த 9-ம் தேதி இரவு இரவது வீட்டு காம்பவுண்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோழிக்கூட்டின் பூட்டை உடைத்து 10 நாட்டுகோழிகள், 4 வான் கோழிகளை திருடி சென்று விட்டனர்.
இதன மதிப்பு ரூ 3500 எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜாண் கிறிஸ்டோபர் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் காட்டுவிளையை சேர்ந்த கொத்தனார் அனீஸ் (வயது 28), கட்டிடத் தொழிலாளி ரெவி (வயது 40) ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் இருவரும் சேர்ந்து கோழிகளை திருடி திங்கள்நகரில் உள்ள ஒரு கோழிக்கடையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 4 கோழிகளை மீட்டனர்.
No comments