தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது:-
தமிழகத்தில் விழா காலங்களில் தொற்று அதிகரிக்காமல் கட்டுக்குள் உள்ளது நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என தெரிவித்தார்.
மேலும், 'மாநிலத்தின் பொருளாதாரமும் மிகப்பெரிய அளவில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில்கூட இந்தியாவிலேயே அதிகப்படியான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது' எனத் தெரிவித்தார்.
No comments