தக்கலையில் பைக் மீது லாரி மோதி விழுந்ததில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி பலியானார். இதனால் அந்த ஏரியாவே சோகத்தில் மூழ்கி உள்ளது மேக்காமண்டபம...
தக்கலையில் பைக் மீது லாரி மோதி விழுந்ததில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி பலியானார். இதனால் அந்த ஏரியாவே சோகத்தில் மூழ்கி உள்ளது

மேக்காமண்டபம் அருகே உள்ள பரவகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், விவசாயி. மனைவி லீலா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இதில் ஒருவர் ரூபிஷா 21. இவர் தக்கலை அருகே உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பகலில் தனது சித்தி ஜாஸ்மின் சுபலா ஸ்கூட்டியை ஓட்ட ரூபிஷா பின்னால் இருந்தபடி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். தக்கலை அரசு நடுநிலைப்பள்ளி பக்கம் வரும்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக தட்டியதில் கீழே விழுந்த ரூபிஷா மீது லாரி ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ரூபிஷாவை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ரூபிஷா பலியானார். இந்த சம்பவம் குறித்து ஸ்கூட்டியை ஓட்டிச் சென்ற மேக்காமண்டபம் குழிவிழையை சேர்ந்த அவருடைய சித்தி ஜாஸ்மின் சுபலா தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தலைமை காவலர் செல்வின் திண்டுக்கல், அழகுமலை பெரும்பாறை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்தார்.
விபத்தில் மாணவி இறந்த சம்பவம் சக மாணவர்களிடையே மற்றும் ஊர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
No comments