இன்றைய இளைஞர்களின் போதை பழக்கம், நகைக்கும் விதமான நடை, உடை, பாவனைகள் மற்றும் கல்வி - வேலை போன்றவற்றில் கவனமின்மை, குடும்பம் மற்றும் சமூக அக்...
இன்றைய இளைஞர்களின் போதை பழக்கம், நகைக்கும் விதமான நடை, உடை, பாவனைகள் மற்றும் கல்வி - வேலை போன்றவற்றில் கவனமின்மை, குடும்பம் மற்றும் சமூக அக்கரையில் பொறுப்பின்மை போன்ற செயல்களில் இருந்து இளைஞர்கள் மாறுபட்டு சரியான பாதையில் இலக்கை நோக்கி இளைஞனே வா என்ற விழிப்புணர்வு இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக தெருமுனை பிரச்சார கூட்டம் நடந்தது.

கன்னியாகுமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திட்டு விளை பேரூந்து நிலையம் அருகாமையில் நடந்த கூட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத், திட்டு விளை கிளை துணைத் தலைவர் யாசிர் அரபாத் தலைமை தாங்கினார்.
மாவட்ட பேச்சாளர் அப்துல் காதர் விழிப்புணர்வு விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் செயலாளர் அப்துல்லத்தீப், துணை செயலாளர் யாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்
செய்தி மற்றும் போட்டோஸ்
செய்யது அஹ்மது கரீம்
மாதவலாயம்
No comments