மணவாளக்குறிச்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மன மகிழ் மன்ற மதுக்கடைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே புதிய ...
மணவாளக்குறிச்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மன மகிழ் மன்ற மதுக்கடைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே புதிய மனமகிழ் மன்ற மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரூர் காங்கிரஸ் தலைவர் லிபின் பாபு தலைமை வகித்தார். குருந்தன்கோடு மேற்கு வட்டார தலைவர் கிளாட்சன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குட்டிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குளச்சல் தொகுதி முன்னாள் தலைவர் சுமன் மற்றும் ஜெமினீஸ், கிரைஸ்ட் ஜெனீத், ஜூஸ், மூர்த்தி, ஜூவா, ஜேக்கப், அருள் சபீதா ரக்சலின், விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளர் நிஜாம், தமுமுக செயலாளர் பக்ருதீன், எஸ்டிபிஐ செயலாளர் அசீம் மற்றும் செல்லப்பன், சுபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments